iPhone மற்றும் iPadல் சேமிப்பகப் பயன்பாட்டை எப்படிப் பார்ப்பது?
iOS மற்றும் iPadOS உங்கள் சாதனத்தின் சேமிப்பகத்தைக் கண்காணித்து, ஒவ்வொரு ஆப்ஸும் எவ்வளவு இடத்தைப் பயன்படுத்துகிறது என்பதைக் காட்டுகின்றன. அமைப்புகள், Finder, Apple சாதனங்களின் ஆப்ஸ், iTunes ஆகியவற்றில் எவ்வளவு சேமிப்பகம் உள்ளது என்பதைப் பார்க்கலாம்.
iOS மற்றும் iPadOS சேமிப்பகத்தை மேம்படுத்துதல்
உங்கள் சாதனத்தில் சேமிப்பகம் குறைவாக இருக்கும்போது, பயன்படுத்தப்படாத ஆப்ஸ், தற்காலிக ஃபைல்கள் போன்ற மீண்டும் பதிவிறக்கக்கூடியவற்றையோ தேவையில்லாதவற்றையோ அகற்றுவதன் மூலம் சேமிப்பகம் காலியாகிறது.
உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தி அதன் சேமிப்பகம் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
அமைப்புகள் > பொது > [சாதனம்] சேமிப்பகம் என்பதற்குச் செல்லவும், பரிந்துரைகள், ஆப்ஸின் பட்டியல், அவற்றின் சேமிப்பகப் பயன்பாடு ஆகிய விவரங்கள் காட்டப்படும்.
ஆப்ஸின் சேமிப்பிடம் பற்றிய கூடுதல் தகவலுக்கு அதன் பெயரைத் தட்டவும். தற்காலிகச் சேமிப்புத் தரவும் தற்காலிகத் தரவும் கணக்கிடப்படாமல் போகலாம்.
விரிவான காட்சியில் நீங்கள்:
ஆப்ஸை ஆஃப்லோட் செய்யலாம். இதனால் ஆப்ஸ் பயன்படுத்தும் சேமிப்பகம் காலியாக்கப்படும், ஆனால் அதன் ஃபைல்களும் தரவும் தக்கவைக்கப்படும்.
ஆப்ஸை நீக்கலாம். இதனால் ஆப்ஸும் அதனுடன் தொடர்புடைய தரவும் அகற்றப்படும்.
ஆப்ஸைப் பொறுத்து, அதன் சில ஆவணங்களையும் தரவையும் நீங்கள் நீக்க முடியும்.
உங்கள் சாதனத்தில் "சேமிப்பகம் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது" என்ற விழிப்பூட்டல் காட்டப்பட்டால், சேமிப்பகம் தொடர்பான பரிந்துரைகளைப் பார்க்கவும் அல்லது வீடியோக்கள், ஆப்ஸ் போன்ற சில உள்ளடக்கத்தை அகற்றவும்.
உள்ளடக்கத்தை வகைப்படுத்துதல்
உங்கள் சாதனத்தில் உள்ள உள்ளடக்க வகைகள் மற்றும் ஒவ்வொரு வகையிலும் என்னென்ன உள்ளது என்ற பட்டியல்:
ஆப்ஸ்: நிறுவப்பட்ட ஆப்ஸ் மற்றும் அவற்றின் உள்ளடக்கம், Files ஆப்ஸின் “எனது iPhone/iPad/iPod Touch” டைரக்டரியில் உள்ள உள்ளடக்கம் மற்றும் Safari பதிவிறக்கங்கள்.
படங்கள்: Photos ஆப்ஸில் சேமிக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் வீடியோக்கள்.
மீடியா: இசை, வீடியோக்கள், பாட்காஸ்ட்கள், ரிங்டோன்கள், கலைப்படைப்புகள் மற்றும் குரல் குறிப்புகள்.
மின்னஞ்சல்: மின்னஞ்சல்கள் மற்றும் அவற்றின் இணைப்புகள்.
Apple Books: Books ஆப்ஸில் உள்ள புத்தகங்கள் மற்றும் PDFகள்.
மெசேஜ்கள்: மெசேஜ்களும் அவற்றின் இணைப்புகளும்.
iCloud Drive: உங்கள் சாதனத்தில் நீங்கள் பதிவிறக்கிய iCloud Drive உள்ளடக்கம்.1
மற்றவை: இவை போன்ற நீக்க முடியாத மொபைல் உடைமைகள்: Siri குரல்கள், எழுத்துருக்கள், அகராதிகள், நீக்க முடியாத பதிவுகள் மற்றும் தற்காலிகச் சேமிப்புகள், Spotlight அட்டவணை, Keychain மற்றும் CloudKit தரவுத்தளம் போன்ற சிஸ்டம் தரவு.2
சிஸ்டம்: ஆப்ரேட்டிங் சிஸ்டம் எடுத்துக் கொண்டுள்ள சேமிப்பகம். இது உங்கள் சாதனம் மற்றும் மாடலைப் பொறுத்து மாறுபடலாம்.
உங்கள் சேமிப்பகம் நிரம்பியிருந்தால், சேமிப்பகத்தை மேம்படுத்த பரிந்துரைகளைப் பயன்படுத்தவும்.
அமைப்புகளின் சேமிப்பகப் பிரிவில், உங்கள் சேமிப்பகத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை உங்கள் சாதனம் வழங்கக்கூடும். உங்கள் சேமிப்பிடத்தை மேம்படுத்த:
உங்கள் சாதனத்திற்கான பரிந்துரைகளைப் பார்க்க, அனைத்தையும் காட்டு என்பதைத் தட்டவும்.
ஒவ்வொரு பரிந்துரையின் விளக்கத்தையும் படித்து, அதை இயக்க ஆன் செய் என்பதைத் தட்டவும் அல்லது நீங்கள் எந்த உள்ளடக்கத்தை நீக்கலாம் என்பதைப் பார்க்க, பரிந்துரையைத் தட்டவும்.
உங்கள் iOS சாதனத்தில் எவ்வளவு சேமிப்பகம் உள்ளது என்று பார்க்க Finder, Apple Devices ஆப்ஸ் அல்லது iTunes பயன்படுத்தவும்.
உங்கள் Macகில் Finderருக்கு மாறவும், அல்லது உங்கள் PCயில் உள்ள Apple Devices ஆப்ஸ் . உங்கள் PCயில் Apple Devices ஆப்ஸ் இல்லை என்றாலோ, macOS Mojave அல்லது அதற்கு முந்தைய பதிப்பை உங்கள் Mac பயன்படுத்தினாலோiTunesஐத் திறக்கவும். உங்கள் Mac எந்த macOSஸைப் பயன்படுத்துகிறது என்பதைக் கண்டறியவும்.
உங்கள் சாதனத்தை உங்கள் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும்.
Finder சாளரத்தின் பக்கப்பட்டி அல்லது Apple Devices ஆப்ஸில் உங்கள் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் iTunes பயன்படுத்தினால், iTunes சாளரத்தின் மேல் இடது மூலையில் உங்கள் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் உள்ளடக்கம் எவ்வளவு சேமிப்பகத்தைப் பயன்படுத்துகிறது என்பது உள்ளடக்க வகை வாரியாக ஒரு பட்டியில் காட்டப்படும்.
ஒவ்வொரு உள்ளடக்க வகையும் எவ்வளவு சேமிப்பகத்தைப் பயன்படுத்துகிறது என்பதைப் பார்க்க, பட்டியின் மேல் உங்கள் மவுஸை நகர்த்தவும்.
உள்ளடக்கத்தை வகைப்படுத்துதல்
உங்கள் சாதனத்தில் உள்ள உள்ளடக்க வகைகள் மற்றும் ஒவ்வொரு வகையிலும் என்னென்ன உள்ளது என்ற பட்டியல்:
ஆடியோ: பாடல்கள், ஆடியோ பாட்காஸ்ட்கள், ஆடியோ புத்தகங்கள், குரல் குறிப்புகள் மற்றும் ரிங்டோன்கள்.
வீடியோ: திரைப்படங்கள், இசை வீடியோக்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள்.
படங்கள்: உங்கள் Photo Library, Camera Roll மற்றும் Photo Streamமில் உள்ள உள்ளடக்கம்.
ஆப்ஸ்: நிறுவப்பட்டுள்ள ஆப்ஸ். ஆவணங்கள் & தரவு பிரிவில் ஆப்ஸின் உள்ளடக்கம் பட்டியலிடப்படும்.
புத்தகங்கள்: iBooks புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் மற்றும் PDF ஃபைல்கள்.
ஆவணங்கள் & தரவு: Safari ஆஃப்லைன் வாசிப்புப் பட்டியல், நிறுவப்பட்ட ஆப்ஸில் சேமிக்கப்பட்ட ஃபைல்கள் மற்றும் தொடர்புகள், காலண்டர்கள், மெசேஜ்கள், மின்னஞ்சல்கள் (அவற்றின் இணைப்புகள்) போன்ற ஆப்ஸ் உள்ளடக்கம்.
மற்றவை: அமைப்புகள், Siri குரல்கள், சிஸ்டம் தரவு மற்றும் தற்காலிகமாகச் சேமிக்கப்பட்ட ஃபைல்கள்.
ஒத்திசைக்கப்பட்ட உள்ளடக்கம்: Finder சாளரத்தில் ஒத்திசை என்பதைக் கிளிக் செய்யும்போது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து ஒத்திசைக்கப்படும் மீடியா உள்ளடக்கம்.3
மற்றவை பிரிவில் உள்ள தற்காலிகமாகச் சேமிக்கப்பட்ட ஃபைல்கள்
Finder, Apple Devices ஆப்ஸ், iTunes ஆகியவை தற்காலிகமாகச் சேமிக்கப்பட்ட இசை, வீடியோக்கள் மற்றும் படங்களை "மற்றவை" பிரிவில் சேமிப்பகமாகக் காட்டுகின்றன. நீங்கள் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யும்போது அல்லது பார்க்கும்போது சிஸ்டம் இந்த ஃபைல்களை உருவாக்குகிறது. அடுத்த முறை நீங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும்போது இது விரைவான அணுகலை அனுமதிக்கிறது. உங்கள் சாதனத்திற்கு அதிக இடம் தேவைப்படும்போது உங்கள் சாதனம் இந்தக் கோப்புகளை நீக்குகிறது.
Finder, Apple Devices ஆப்ஸ் அல்லது iTunesஸில் நீங்கள் பார்ப்பதிலிருந்து உங்கள் சாதனத்தில் உள்ள சேமிப்பகம் வேறுபட்டால்
Finder, Apple Devices ஆப்ஸ், iTunes ஆகியவை தற்காலிகமாகச் சேமிக்கப்பட்ட ஃபைல்களை மற்றவை என்று வகைப்படுத்துவதால், இசை அல்லது வீடியோக்கள் பயன்படுத்திய சேமிப்பக அளவு வேறுபடலாம். உங்கள் சாதனத்தில் பயன்பாட்டைப் பார்க்க, அமைப்புகள் > பொது > [சாதனம்] சேமிப்பு என்பதற்குச் செல்லவும்.
தற்காலிகமாகச் சேமிக்கப்பட்ட ஃபைல்களை உங்கள் சாதனத்திலிருந்து நீக்க விரும்பினால்
தற்காலிகமாகச் சேமிக்கப்பட்ட ஃபைல்களையும் தற்காலிக ஃபைல்களையும் சேமிப்பகத்தைக் காலியாக்குவதற்காக உங்கள் சாதனம் நீக்குவதால் நீங்கள் அவற்றை நீக்க வேண்டியதில்லை.
1. நீங்கள் iCloud உள்ளடக்கத்தை தானாக நீக்க முடியாது.
2. தற்காலிகமாகச் சேமிக்கப்பட்ட ஃபைல்களை சிஸ்டம் நீக்க முடியாது.
3. ஒத்திசைக்கப்பட்ட உள்ளடக்கத்தில் உள்ள தரவை உங்கள் iPhoneனைப் பயன்படுத்தி நீக்க முடியாது. இந்தத் தரவை நீக்க, Finderருக்கு மாறவும் அல்லது Apple Devices ஆப்ஸையோ iTunesஸையோ திறந்து, தரவைத் தேர்வுநீக்கி, ஒத்திசை என்பதைக் கிளிக் செய்யவும்.